Friday, October 16, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமயிலத்தமடுவில் பசுக்கள் மீது துப்பாக்கிச்சூடு

மயிலத்தமடுவில் பசுக்கள் மீது துப்பாக்கிச்சூடு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு,  மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில்
மேய்ச்சலுக்காகச் சென்ற பசுக்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் திரும்பியுள்ளதாக அப்பகுதி கால்நடைப் பண்ணையாளர்கள் கவலை
வெளியிட்டுள்ளனர்.

நேற்று (14) இரவு மேய்ச்சலுக்காகச் சென்ற பசுக்கள்இ இன்று (15) காலை துப்பாக்கிச்
சூட்டுக் காயங்களுடன் திரும்பி வந்துள்ளதாகப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மயிலத்தமடு,  மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை நீண்டகாலமாக நிரந்தரத்
தீர்வின்றித் தொடர்ந்து வருகின்றது.

இதனால்,  பரம்பரை பரம்பரையாக அப்பகுதியில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவரும் பண்ணையாளர்கள்,  பல்வேறு சிரமங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக,  மேய்ச்சல் தரைப் பகுதியில் நிலவும் காணிப் பிரச்சினைகள் மற்றும்
கால்நடைகள் மீதான தாக்குதல்கள் காரணமாகத் தமது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments