Friday, October 16, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கை

மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கை

வடமத்திய,  கிழக்கு,  மத்திய,  சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் கிளிநொச்சி,  முல்லைத்தீவு,  வவுனியா,  கம்பஹா,  கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பையொன்றை வெளியிட்டுள்ளது.

இன்று (15) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் நாளை (16)
அதிகாலை 01.00 மணி வரை செல்லுபடியாகும்.

இதற்கமைய,  வடமத்திய,  கிழக்கு,  மத்திய,  சப்ரகமுவ மற்றும் ஊவா
மாகாணங்களிலும் கிளிநொச்சி,  முல்லைத்தீவு,  வவுனியா,  கம்பஹா,  கொழும்பு
மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில்
ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான
அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பகுதிகளில் தற்காலிகமாகப்
பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அத்திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments