யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக அனுமதியளிக்கப்பட்ட நான்கு மதுபானசாலைகளின் அனுமதிகளை இரத்துச் செய்யுமாறு கோரி, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினரால் இன்று (15) கவனயீர்ப்புப் போராட்டம்
முன்னெடுக்கப்பட்டது.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்தில்,
புதிதாக அனுமதிக்கப்பட்ட மதுபானசாலைகளுக்கு எதிரான பதாகைகளை
ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்
இப்போராட்டத்தில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச. சுகிர்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்இ மதுவொழிப்புக்கான அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக மதுபானசாலைகளைத் திறப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிகளை இரத்துச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியே
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

