Saturday, October 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்

நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்

கிரிஷ் நிறுவனத்தின் விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபரான ஜானகி சிறிவர்தன தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை
நீதவான் நிராகரித்துள்ளது

இதற்கிடையில்,  நாமல் ராஜபக்ஷவின் பிணை உத்தரவு இன்னும் தயாரிக்கப்படாததால்,  அது அடுத்த வழக்கு விசாரணை நாளில் அறிவிக்கப்படும்
என கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம குறிப்பிட்டுள்ளார்.

கிரிஷ் நிறுவனத்தின் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய வகையில்
70 மில்லியன் ரூபாய் பணத்தை இலஞ்சமாக வழங்கியமை மற்றும் பெற்றுக்
கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்,  இலஞ்ச ஊழல்
விசாரணை ஆணைக்குழுவினால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments