Saturday, October 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவை 190 மில்லியன் ரூபா செலவில் நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (16) யாழ்ப்பாணம் கடற்கரை வீதியில் நடைபெற்றது.

இலங்கை நீர்வளச் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு,  சமய வழிபாடுகளுடன் ஆரம்பமானது. இதன்போது,  கட்டட நிர்மாணப் பணிகள்
சிறப்பாக நிறைவேற வேண்டி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்துஇ குறித்த கட்டடத்திற்கான திட்ட முன்மொழிவைப் பிரதிபலிக்கும் பெயர்ப்பலகையை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி,
கடற்றொழில்,  நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ. சந்திரசேகர்,
பிரதியமைச்சர்,  யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர்இ இலங்கை நீர்வளச்
சபையின் அதிகாரிகள் மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்பினரின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

வடக்கு மாகாணத்தின் நிலத்தடி நீர் வளங்களை முறையாக முகாமைத்துவம்
செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் 190 மில்லியன் ரூபா
செலவில் இந்தப் பிரிவு நிறுவப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments