Saturday, October 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைலிட்ரோ நிறுவனம் முக்கிய அறிவிப்பு

லிட்ரோ நிறுவனம் முக்கிய அறிவிப்பு

மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் லிட்ரோ நிறுவனம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தற்போது நிலவும் லிட்ரோ சமையல் எரிவாயு தட்டுப்பாடு எதிர்வரும்
18ஆம் திகதிக்குள் முழுமையாகச் சீராகும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

3, 500 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிவந்த கப்பல் உரிய நேரத்தில்
நாட்டை வந்தடையாததே தற்போதைய தட்டுப்பாட்டுக்குக் காரணம் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன விளக்கமளித்துள்ளார்.

எனினும்,  தாமதமடைந்த குறித்த கப்பல் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளதாகவும்,  அதிலிருந்து சமையல் எரிவாயுவை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து,  நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயு விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  லிட்ரோ சமையல் எரிவாயுவுக்கு மாத்திரமன்றி,  நாட்டின் சில
பகுதிகளில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments