Monday, October 19, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநாடு முழுவதும் திடீர் மின்தடை விசாரணை

நாடு முழுவதும் திடீர் மின்தடை விசாரணை

நாடு முழுவதும் நேற்று (17) ஏற்பட்ட திடீர் மின்தடை தொடர்பாக முறையான
விசாரணை நடத்தி வருவதாக,  தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் தனியார்
நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அந்த நிறுவனத்தின் தலைவர் பிரதீப்
பிரியதர்ஷன,  விசாரணையை நிறைவு செய்து,  அதன் அறிக்கையை ஒரு
மாதத்திற்குள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் சம்பந்தப்பட்ட
அமைச்சுக்கும் சமர்ப்பிக்கவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும்,  எதிர்காலத்தில் இதுபோன்ற மின்தடைச் சம்பவங்கள் ஏற்படுவதைத்
தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கவும் குறித்த
அறிக்கையின் மூலம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments