நாட்டில் நிலவும் கனமழை காரணமாகப் பாடசாலைகளில் வகுப்புகளை நடத்த
முடியாத சூழ்நிலை ஏற்பட்டால்இ அது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம்
மாகாணக் கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு
வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்
பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலைகளில் தேவையான
தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

