Tuesday, October 27, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

மகாவலி கங்கையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களாகப்
பெய்த பலத்த மழை காரணமாக,  பஸ்பாகே கோரள பிரதேச செயலாளர் பிரிவுக்கு
உட்பட்ட மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான
வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து,  குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும்,  அப்பகுதிகளின்
ஊடாகப் பயணிக்கும் வாகன சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன்
செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

மகாவலி கங்கைக்கு அருகில் வசிக்கும் மக்கள் தொடர்ந்தும் விழிப்புடன்
இருப்பதுடன்,  சாத்தியமான வெள்ள அபாயத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments