Tuesday, October 27, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநாளை பாடசாலைகளுக்கு விடுமுறையா? வெளியான அறிவிப்பு

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறையா? வெளியான அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த
அனைத்து பாடசாலைகளும் நாளை (28) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும்
என கல்வி பிரதியமைச்சர் மதுர செவிரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் கடும் மழை
மற்றும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு,  மாணவர்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தும் நோக்கில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன்படி,  நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (27) விடுமுறை
வழங்கப்பட்டிருந்தது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே
இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு ஏற்கனவே அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்திருந்தது.

இந்நிலையில்,  நாளை (28) முதல் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள்
வழமைபோன்று மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி பிரதியமைச்சர்
தெரிவித்துள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments