Wednesday, October 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவசந்த கரன்னாகொட, யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

வசந்த கரன்னாகொட, யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ
ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்
ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள ஊழல் வழக்கை,  எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் முன்விசாரணை அமர்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து,  கொழும்பு
மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

யோஷித ராஜபக்ஷவுக்கு உரிய தகுதிகள் இல்லாத நிலையிலும்,  அவரை ஐக்கிய
இராச்சியத்திலுள்ள அரச கடற்படைக் கல்லூரியில் பயிற்சிக்காக அனுப்பியதன்
மூலம் ஊழல் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டியே இந்த வழக்கு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments