Wednesday, October 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகோட்டாபயவின் வெளிநாட்டுப் பயணத் தடை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கோட்டாபயவின் வெளிநாட்டுப் பயணத் தடை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குவது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை குறித்து,  எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சட்டத்தரணிகள் குழுவினால்
தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தைப் பரிசீலித்த பின்னர்,  கொழும்பு
கோட்டை நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டதைத் தொடர்ந்து மேலதிக மருத்துவ
சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சிங்கப்பூர் செல்ல அனுமதி வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி சார்பில் சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது,  முன்னாள் ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்சவும் திறந்த நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார் எனினும்,  இந்த வழக்கில் முறைப்பாட்டாளரான குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
நீதிமன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.

இதனையடுத்துஇ வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குவது
தொடர்பான கோரிக்கை குறித்து தமது நிலைப்பாட்டை முன்வைப்பதற்காக
நவம்பர் 4ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுத்
திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக,  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச
மற்றும் பல முன்னாள் புலனாய்வு அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை
விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments