Friday, October 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமுதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு

முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு

ஒக்டோபர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகை இன்று (29) முதல்
பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.

அஸ்வெசும நல உதவித் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ்,  70 வயதுக்கு மேற்பட்ட
616, இ362 பேருக்கு 3, 081, 810, 000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டத்தின் கீழ்,  70 வயதுக்கு மேற்பட்ட 79, 520 பேருக்கு 397,600,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இரண்டு கட்டங்களிலும் உள்ள மொத்தம் 695, 882 முதிய பயனாளிகளுக்கு
ஒக்டோபர் மாதத்திற்காக 3, 479,410, 000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே தகுதியுடைய பயனாளிகள் இன்று (29) முதல் தங்களது அஸ்வெசும வங்கிக்
கணக்குகள் ஊடாக முதியோர் உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments