நுகர்வோருக்குத் தொடர்ச்சியாக எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கத் தவறியதன் காரணமாக, லாவ்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத்
தொடரப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் பிறப்பிக்கப்பட்ட 86 ஆம் இலக்கக்
கட்டளையை மீறி செயற்பட்டமைக்காகவே இந்த சட்ட நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
புதுக்கடை இலக்கம் 5 நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள
இவ்வழக்கு தொடர்பில், லாஃப்ஸ் நிறுவனத்திற்கு அழைப்பாணை பிறப்பித்துள்ள
நீதிமன்றம், வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி மீண்டும்
விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

