Sunday, November 1, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகடற்படையினரால் தெற்கு கடற்பரப்பில் காயமடைந்த கப்பல் பணியாளர் மீட்பு

கடற்படையினரால் தெற்கு கடற்பரப்பில் காயமடைந்த கப்பல் பணியாளர் மீட்பு

வெளிநாட்டு கப்பல் ஊழியர் ஒருவரை அவசர மருத்துவ சிகிச்சைக்காகக் கரைக்கு
அழைத்து வரக் கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

மார்ஷல் தீவுகளின் கொடியின் கீழ் பயணித்துக் கொண்டிருந்த
“MV SPIRIT OF TOKYO” என்ற சரக்குக் கப்பலில் இருந்த ஊழியர் ஒருவரே
இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளார்.

நாட்டின் தெற்கு ஆழ்கடலில்,  இலங்கையின் கடற்பரப்பு தேடல் மற்றும் மீட்பு
வலயத்திற்குள் இக்கப்பல் பயணித்துக் கொண்டிருந்த போது,  குறித்த ஊழியர்
கப்பலுக்குள் திடீர் விபத்துக்குள்ளாகியுள்ளார். இதன்போது அவரது நெற்றிப் பகுதியில் காயம் ஏற்பட்டு நிலைமை தீவிரமடைந்துள்ளது.

அதற்கமைய,  அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காகக் கரைக்குக் கொண்டு
வருவதற்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு அக்கப்பல்,  கொழும்பு
கடற்பரப்பு தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவித்துள்ளது.

அதன்படி உடனடியாகச் செயற்பட்ட கடற்படையினர்,  பாதிக்கப்பட்ட நபருக்கு
தேவையான மருத்துவ ஆலோசனைகளை அக்கப்பலுக்குத் தொடர்புகொண்டு
வழங்க நடவடிக்கை எடுத்தனர்.

பின்னர் இன்று (01) அதிகாலை,  குறித்த கப்பலிலிருந்து அவர் காலி துறைமுகத்திற்கு
அருகில் கொண்டு வரப்பட்ட பிறகு,  தெற்கு கடற்படை கட்டளையினால் P451 படகு
பயன்படுத்தப்பட்டு அவர் கரைக்கு அழைத்து வரப்பட்டு,  மேலதிக சிகிச்சைக்காக
வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கடற்பரப்பு தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின்
ஒருங்கிணைப்பில்,  இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பு தேடல் மற்றும்
மீட்பு வலயத்திற்குள்ளும்,  அதற்கு அருகிலுள்ள கடற்பரப்பு தேடல் மற்றும் மீட்பு
வலயத்திற்குள்ளும் ஆபத்தில் சிக்கும் கடற்பயணிகள் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு நிவாரணம் வழங்குவதற்குக் கடற்படை எப்போதும் தயார் நிலையில் இருப்பதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments