Tuesday, November 3, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகுளமொன்றில் இருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

குளமொன்றில் இருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் வீட்டில் இருந்து நண்பர்களுடன் வெளியில்
சென்ற நிலையில் இன்றைய தினம்(02) குளமொன்றில் இருந்து சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.

அளவெட்டி பகுதியில் உள்ள குளமொன்றில் சடலம் ஒன்று மிதப்பதாக
தெல்லிப்பழை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ
இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக
வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையில்,  சடலமாக
மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்,  அளவெட்டி பகுதியில் திருமணம்
முடித்து வாழ்ந்து வந்துள்ளார்.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் சிலருடன் வீட்டில் இருந்து
சென்றுள்ளார். இந்நிலையிலையே குளத்தில் சடலமாக காணப்பட்டுள்ளார் என
தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments