Tuesday, November 3, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை

யாழில் பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையில்
ஈடுபடும் தனியார் வாகனங்களை முறையான பதிவுக்கு உட்படுத்தி,  அங்கீகரிக்கப்பட்ட சேவையாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கை
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட பாடசாலை வாகனச் சங்கத் தலைவர் கோகுலம் தலைமையில்,
சுண்டுக்குழியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இக்கூட்டம் இடம்பெற்றது. இதில் யாழ்ப்பாணப் போக்குவரத்துப் பிரிவின் இரண்டாம் நிலை அதிகாரியும் கலந்து கொண்டார்.

1999ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையில்
ஈடுபட்டு வரும் பல தனியார் வாகனங்கள் இதுவரை முறையான பதிவுக்கு
உட்படாமல் சேவையாற்றி வந்துள்ளன. அதேவேளை,  மாவட்டத்தில் இயங்கி வந்த
சங்கமும் பதிவு செய்யப்படாத நிலையில் காணப்பட்டது.

இந்நிலையில்,  சேவையை முறைப்படுத்தும் நோக்கில் அகில இலங்கை பாடசாலை
சிறுவர் போக்குவரத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள தாய்ச் சங்கத்தின் பிரதிநிதிகளால் பாடசாலை
மாணவர் போக்குவரத்துச் சேவைக்கான நடைமுறைகள்,  விதிமுறைகள் மற்றும்
பதிவு தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இதனடிப்படையில்,  யாழ். மாவட்டத்தில் பாடசாலை மாணவர் போக்குவரத்துச்
சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் வாகன உரிமையாளர்களுக்கும்
சங்கத்தின் ஊடாக தேவையான தகவல்கள் மற்றும் வழிகாட்டல்கள்
வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் போக்குவரத்துச் சேவையைப் பாதுகாப்பானதாகவும்,  பொறுப்புமிக்கதாகவும்,  முறையான அங்கீகாரத்துடனும் முன்னெடுப்பதே
இந்நடவடிக்கையின் நோக்கமாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments