பணச்சலவை தடுப்புச் சட்டம் மற்றும் ஒழுங்கு விதிகளின் கீழ் யோஷித ராஜபக்ஷவுடன் இணைந்து குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அவரது பாட்டியான டேசி பொரஸ்ட், அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதிவாதிக்கு வழக்கினை எதிர்கொள்ளும் அளவுக்கு முறையான மனநிலை
இல்லை என சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்த பின்னரே நீதிபதி
இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதற்கிடையில், பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள
குற்றச்சாட்டுகளுக்கு தாம் குற்றவாளியல்ல என யோஷித ராஜபக்ஷ இன்று
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
குறித்த குற்றச்சாட்டுகள் இன்று திறந்த நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட போதே
அவர் இதனைக் குறிப்பிட்டார்.

