Thursday, November 5, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய கொள்கலன் மீட்பு

வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய கொள்கலன் மீட்பு

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட,  சுமார் 792 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு
சிகரெட்டுகள் அடங்கிய கொள்கலன் ஒன்றை சுங்கத்தின் மத்திய புலனாய்வுப்
பிரிவு கைப்பற்றியுள்ளது.

இந்தியாவிலிருந்து நகல் காகிதங்கள் மற்றும் சாதாரண காகிதங்கள் எனக்
குறிப்பிட்டு போலி இறக்குமதி ஆவணங்களைச் சமர்ப்பித்து இந்த மோசடி
மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளது.

கந்தானைப் பகுதியில் அமைந்துள்ள போலி முகவரி மற்றும் ஆவணங்களைக்
கொண்ட ஒரு நிறுவனத்திற்கு இந்தக் கொள்கலன் இறக்குமதி செய்ய
சந்தேகநபர்கள் திட்டமிட்டிருந்தமை சுங்க விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது,  குறித்த
கொள்கலனுக்குள் இருந்த 457 அட்டைப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நாட்டிற்குள் பல்வேறு நூதன முறைகள் மூலம் இது போன்ற சட்டவிரோதப்
பொருட்களைக் கொண்டுவரும் கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை சுங்கத்தினால் தற்போது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் பரிசோதனை முறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இடம்பெற்ற இந்தச் கடத்தல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர்
இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  சம்பவம் குறித்து இலங்கை
சுங்கத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments