Thursday, November 5, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகெஹெலியவுக்கு எதிரான மேலதிக சாட்சி விசாரணை ஒத்திவைப்பு

கெஹெலியவுக்கு எதிரான மேலதிக சாட்சி விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு
எதிரான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை டிசம்பர் மாதம் 19 ஆம் திகதிக்கு
அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால்
இன்று (05) உத்தரவிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது ஊடகத்துறை
அமைச்சராக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான
சுமார் பத்து இலட்சம் ரூபாயை (ரூ. 990, 000) செலவிட்டு அரசியல்
நடவடிக்கைகளுக்காக 600 ஜி.ஐ. குழாய்களைக் கொள்வனவு செய்ததன் மூலம்
அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்திய குற்றத்திற்கு இலஞ்ச – ஊழல்
ஆணைக்குழுவினால் பிரதிவாதிகளுக்கு எதிராக இவ்வழக்குத் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (05) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்
கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் முன்வைக்கப்பட்ட கருத்தைக் பரிசீலித்த பின்னரே
நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இவ்வழக்கின் பிரதிவாதிகளாக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் விமல் ரூபசிங்க
மற்றும் அதன் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சந்திரபால லியனகே ஆகியோர்
பெயரிடப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments