பொலன்னறுவை அகம்புர கிராமத்திலுள்ள வீடொன்றில் மறைத்து
வைக்கப்பட்டிருந்த 12 போர் ரக துப்பாக்கிகள் மூன்று உட்பட ஆயுதங்கள்
மற்றும் உபகரணங்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக
மிகஸ்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிகஸ்வெவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர்
சுசந்த ஜயரத்னவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸார் சோதனையிட்ட போது வீட்டின் உரிமையாளர் அங்கு இல்லாத நிலையில் அவரது மனைவி மட்டுமே வீட்டில் இருந்துள்ளதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டை சோதனையிட்ட போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 போர் ரக துப்பாக்கிகள் மூன்று 8 தோட்டாக்கள் 9 தோட்டாக்களின் உறைகள் துப்பாக்கிகளை
சுத்தம் செய்யும் உபகரணம் ஒன்று தோட்டாக்களை வைத்திருக்கும் இடுப்புப் பட்டி
ஒன்று 18 ஈயக் குண்டுகள் மற்றும் 5 ஈயத் தகடுகள் என்பன பொலிஸாரால்
கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தத் துப்பாக்கிகள் மிருகங்களை வேட்டையாடுவதற்காகப்
பயன்படுத்தப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

