கிரிஷ்’ ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நவம்பர்
20 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிணை
வழங்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கின் மற்றொரு சந்தேகநபரான ஜானகி சிறிவர்தனவை நவம்பர் 20 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

