தட்டம்மை நோய் பரவல் காரணமாக வெலிக்கடைஇ கொழும்பு விளக்கமறியல்
சிறைச்சாலை மற்றும் மெகசின் சிறைச்சாலைகளில் வழக்கு நடவடிக்கைகளுக்காக கைதிகள் நீதிமன்றங்களுக்க முன்னிலைப்படுத்தப்படவில்லை சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று (09.11.2026) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு முன்னிலைப்படுத்தப்பட திட்டமிடப்பட்டிருந்த கைதிகள்
அழைத்து வரப்படவில்லை. அது தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்தினால்
நீதிமன்றங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சிறைச்சாலை அதிகாரிகள் மாத்திரம் இன்று நீதிமன்றங்களுக்கு
வந்துள்ளதுடன், வழக்கு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சிறைக்கைதிகள்
தடுத்து வைக்கப்படும் சிறைக்கூடங்கள் வெறிச்சோடி காணப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.

