Friday, November 20, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஞானசார தேரரின் சிறைத்தண்டனையை உறுதி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம்

ஞானசார தேரரின் சிறைத்தண்டனையை உறுதி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம்

இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட நான்கு வருட கடூழியச் சிறைத்
தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

குறித்த தண்டனையிலிருந்து தம்மை நிரபராதி என விடுதலை செய்யுமாறு
கோரி ஞானசார தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை
தள்ளுபடி செய்த நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி கொழும்பு கிருலப்பனை பகுதியில்
கூரகல விகாரை தொடர்பாக நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில்
வெளியிட்ட கருத்துக்களின் மூலம் இஸ்லாம் மதத்தை அவமதித்தமை மற்றும்
இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்திற்குப் பங்கம்
விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் இலங்கை தண்டனைச்
சட்டக்கோவையின் 291 ஆவது பிரிவின் கீழ் சட்டமா அதிபரினால் இந்த
வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசார தேரருக்கு
கொழும்பு மேல் நீதிமன்றம் 2024 ஆம் ஆண்டில் நான்கு வருட கடூழியச் சிறைத்
தண்டனை விதித்திருந்தது.

அந்தத் தண்டனைக்கு எதிராகவே ஞானசார தேரரினால் இந்த மேன்முறையீடு
மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments