Monday, November 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவிடுக்கப்பட்டுள்ள பலத்த மின்னல் எச்சரிக்கை

விடுக்கப்பட்டுள்ள பலத்த மின்னல் எச்சரிக்கை

நாட்டின் 14 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இன்று (22) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை
முற்பகல் 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,  அம்பாறை, குருநாகல்,  களுத்துறை, கேகாலை,  கொழும்பு, காலி,
நுவரெலியா, பதுளை,  கண்டி,  மாத்தறை,  மாத்தளை,மொனராகலை,  இரத்தினபுரி
மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது
இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்
என்பதால்,  பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல்
திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments