நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையால் மரக்கறிப் பயிர்ச்செய்கைகள்
பாதிக்கப்பட்டுள்ள நிலையில்இ உள்ளூர் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள்
பெருமளவில் அதிகரித்துள்ளன.
மழையினால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, சந்தைக்குத் தேவையான மரக்கறிகளை
விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் விலைகள் அதிகரித்துள்ளதுடன், நுகர்வோர் கொள்வனவையும்
குறைத்துள்ளதாகவும், தமது வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
ஹட்டன் பகுதி மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஹட்டன் சந்தையில் தற்போது கத்தரிக்காய் ஒரு கிலோகிராம் 500 ரூபாய்க்கும்,
பச்சை மிளகாய் 800 ரூபாய்க்கும், போஞ்சி 450 ரூபாய்க்கும், கரட் 600 முதல்
700 ரூபாய் வரையும், பூசணி மற்றும் வாழைக்காய் தலா 400 ரூபாய்க்கும்
விற்பனை செய்யப்படுகின்றன.
முட்டைக்கோஸ் 600 முதல் 650 ரூபாய் வரையும், வெள்ளரிக்காய் 350 ரூபாய்க்கும்,
தக்காளி மற்றும் பாகற்காய் தலா 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
அதேவேளை, புடலங்காய் 600 ரூபாய்க்கும், நுவரெலியா உருளைக்கிழங்கு
450 ரூபாய்க்கும், எலுமிச்சை 2,000 ரூபாய்க்கும், சிவப்பு வெங்காயம் 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
மரக்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அன்றாட உணவுத்
தேவைகளுக்காக அவற்றைக் கொள்வனவு செய்யும் பொதுமக்கள் பெரும்
சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

