Wednesday, November 25, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஆனந்த பாலிதவுக்கு மீண்டும் விளக்கமறியல்

ஆனந்த பாலிதவுக்கு மீண்டும் விளக்கமறியல்

ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான
ஆனந்த பாலிதவை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி வரையில் மீண்டும்
விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனந்த பாலித,  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பெற்றோலிய
சேமிப்பு மற்றும் விநியோகப் பிரிவில் எரிபொருள் நிரப்புணராகப்
பணியாற்றியவர்.

இவர் தேசிய சுதந்திர ஊழியர் சங்கம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின்
தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் 2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் சட்டவிரோதமாக
மேலதிக நேரக் கொடுப்பனவுகளைப் பெற்றதாக அவருக்கு எதிராக முறைப்பாடு
செய்யப்பட்டிருந்தது.

அரச மற்றும் தனியார் துறை இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தின் செயலாளர்
ரஞ்சித் ஹெட்டியாராச்சி,  2024 ஒக்டோபர் 7ஆம் திகதி நிறுவனத்தின்
முகாமைத்துவப் பணிப்பாளரிடம் அது தொடர்பான முறைப்பாட்டைச்
செய்திருந்தார்.

அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட உள்ளகக் கணக்காய்வு விசாரணையின்
அறிக்கையைத் தொடர்ந்து, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால்
அவர் அண்மையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments