முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு ரூ.130, 000 அபராதம் விதித்து கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட வாகனமொன்றை வைத்திருந்தமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து
இந்த அபராதத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

