Monday, August 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது

யாழில் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது

யாழில் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அராலி வீதி, பொம்மைவெளி பகுதியிலேயே இரண்டு இளைஞர்கள் இவ்வாறு
கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடமிருந்து 620 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும்
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்இ
யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த
கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில்
தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments