Thursday, August 6, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமது போதையில் வந்த சாரதியால் பறிபோன உயிர்கள்

மது போதையில் வந்த சாரதியால் பறிபோன உயிர்கள்

பாதசாரி கடவையைக் கடக்கும்போது மதுபோதையில் சாரதியொருவர்
செலுத்திச் சென்ற காரொன்று மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் உயிரிழந்துள்ளனர்.

இறந்த பெண்களில் ஒருவரின் இரண்டு பிள்ளைகளும் விபத்தில் படுகாயமடைந்து
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஹொரணை – கொழும்பு வீதியில் உள்ள கோரளயிம பிரதேசத்தில் உள்ள உறவினர்
ஒருவரின் இறுதிச் சடங்கிற்கு வந்த இரண்டு பெண்களும்இ இரண்டு பிள்ளைகளும்
நேற்று இரவு 9.25 மணியளவில் அதே பகுதியில் உள்ள மற்றொரு உறவினர்
வீட்டிற்குத் திரும்புவதற்காக பாதசாரி கடவையில் பாதையைக் கடக்கும் போது
விபத்தில் சிக்கினர்.

கோனபொலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு கார் ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் உட்பட
நான்கு பேர் உடனடியாக வேதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு ஒரு பெண் சிகிச்சைப் பலனின்று மரணித்துள்ளார்.

விபத்தில் காயமடைந்து மரணித்த பெண்ணின் 11 மற்றும் 17 வயதுடைய இரண்டு
மகள்களும்,  அவரது சகோதரியும் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு
அவசரமாக மாற்றப்பட்டனர். இதன்போது சகோதரியும் சிகிச்சைப் பலனின்றி
உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்த 45 வயதான சுரங்கிகா தமயந்தி,  பண்டாரகம,  ஹேன்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

உயிரிழந்த அவரது சகோதரி பேருவளை.  மாகல்கந்த,  அலுத்ஹேன பகுதியில்
வசித்துவந்த மூன்று பிள்ளைகளின் தாயான 50 வயதுடைய ஷிரோமி மாலா பெர்னாண்டோ என தெரியவந்துள்ளது.

பலத்த காயமடைந்தவர்கள் விபத்தில் உயிரிழந்த சுரங்கிகா தமயந்தியின் இரண்டு
பிள்ளைகளாவர்.

அவர்கள் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று
வருகின்றனர்.

சந்தேகத்திற்குரிய வாகன சாரதி தனது மூன்று வயது மகளுடன் உணவு
வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது,  ​ இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்துக்குப் பிறகு,  அவர் தனது மகளை அருகிலுள்ள வீட்டில் மறைத்து வைத்துவிட்டு,  பொலிஸார் அங்கு வந்தவுடன் சரணடைந்தார்.

விபத்து தொடர்பாக 28 வயதுடைய சாரதி கைது செய்யப்பட்டார்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவர் மதுபோதையில் இருந்ததாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments