நுவரெலியா மாவட்ட கொட்டகலை பிரதேசபையின் புதிய தவிசாளராக
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் இராஜமணி பிரசாத்
தெரிவு செய்யப்படுள்ளதுடன் பிரதி தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜோசப் யாகுள மேரி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இன்று (17 ) நடைபெற்ற
கொட்டகலை பிரதேசசபையின் கன்னி அமர்வில் திறந்த வெளி வாக்கெடுப்பின் மூலம் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.
சபையமர்விற்கு 16 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில்
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பினை நடாத்த
கோரிக்கை முன்வைத்தனர். எனினும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் திறந்த வெளி வாக்கெடுப்பினை கோரினர். இதன்போது அதிக விருப்பு காரணமாக திறந்த வெளி வாக்கெடுப்பு நடத்துவதாக ஆணையாளர் அறிவித்தார்.
ஆணையாளரின் அறிவிற்பிற்கு எதிப்பு தெரிவித்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நால்வர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது வெளிநடப்பு செய்தனர்.
12 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொண்ட போதும் ஈரோஸ் ஜனநாயக
முன்னணி உறுப்பினர் ஒருவர் மற்றும் ஜனநாயக தேசிய முன்னணி உறுப்பினர்கள்
ஒருவருமாக இருவர் வாக்களிக்காது நடுநிலை வகித்தனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள்
வாக்களிப்பில் கலந்து கொண்டனர்.
இதன் படி 10 வாக்குகளின் மூலம் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவு
இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

