Saturday, June 27, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகல்கிசையில் இரு குழுக்களுக்கிடையே மோதல் : ஒருவர் பலி

கல்கிசையில் இரு குழுக்களுக்கிடையே மோதல் : ஒருவர் பலி

கல்கிசை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரலிய வீட்டுவசதிப் பகுதியில்
இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று  மாலை இடம்பெற்றதாகவும்,  கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் லுனாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் லுனாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த
நிலையில் உயிரிழந்ததாகவும்,  மற்றொருவர் மேலதிக சிகிச்சைக்காக
களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் கல்கிசை பொலிஸார் கூறினர்.

இறந்தவர் அங்குலான பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவராவார்.

இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதால் இந்தக் கொலை நிகழ்ந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையைச் செய்த சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்ற அவர்களைக் கைது செய்ய கல்கிசை
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments