Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபிரதமரின் பங்கேற்புடன் யாழில் கலந்துரையாடல்

பிரதமரின் பங்கேற்புடன் யாழில் கலந்துரையாடல்

புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

புதிய கல்விச்சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஒவ்வொரு மாகாணங்களிலும்
கலந்துரையாடல் இடம்பெற்று வந்தது.

இந்த நிலையில் புதிய கல்வி சீர்த்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின்
எட்டாவது அமர்வு வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில்
இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பிலான தெளிவூட்டல் கலந்துரையாடலனது பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமர்சூரிய தலைமையில் நடைபெற்றது.

2026 ஆம் ஆண்டு முதல் நாட்டின் கல்வி முறையில் குறிப்பாக பாடசாலைக் கல்வி
முறையில் மாற்றத்தைக் கொண்டுவரும் முகமாக கல்விச் சமூகத்தின் கருத்துக்களை
பெற்றுக் கொள்ளும் வகையில் நடைபெறும் கலந்துரையாடல்களின் ஓர் அங்கமாகவே
இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

கலந்துரையாடலில் பிரதமர் ஹரிணி அமரசூரிய,  கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் சந்திரசேகரன்,  கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுபோவ, வடக்கின் பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கின் ஆளுனர் வேதநாயகன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன்
நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்,  கல்விப்புலம் சார் அதிகாரிகள் எனப்
பலர் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments