Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் வீட்டுக் கூரையிலிருந்து கீழே விழுந்த இளைஞன் உயிரிழப்பு

யாழில் வீட்டுக் கூரையிலிருந்து கீழே விழுந்த இளைஞன் உயிரிழப்பு

யாழில் வீட்டு கூரையை சீர் செய்வதற்காக முயன்ற இளைஞர் ஒருவர் கீழே விழுந்து
உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்
இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் தெற்குஇ கோப்பாய் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரம் பிரணவன் என்ற
25 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் வீட்டின் சீற்றினை சீர் செய்வதற்காக கூரையின் மேல் ஏறியுள்ளார். இதன்போது சீற் உடைந்து கீழே விழுந்த நிலையில் மயக்கமுற்றுள்ளார்.

பின்னர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம்
மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி
நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments