Friday, August 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதலாவ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தலாவ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அனுராதபுரம்-குருணாகலை பிரதான வீதியின் தலாவ-மீரிகம சந்திக்கு அருகிலுள்ள
மொரகொட பகுதியில் நடந்த வீதி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
நான்காக உயர்ந்துள்ளது.

அனுராதபுரத்திலிருந்து குருணாகலை நோக்கிச் சென்ற லொறியும்,
குருணாகலையிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற வேனும் இன்று (25) அதிகாலை தலாவ-மீரிகம சந்திக்கு அருகிலுள்ள மொரகொட பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த வேனின் சாரதி மற்றும் லொறியின் சாரதி உட்பட 7 பேர்
சிகிச்சைக்காக தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போதுஇ வேனில் பயணித்த மூன்று பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த வேனில் பயணித்த ஏனைய மூன்று பேரின் நிலை மோசமாக இருந்ததால்,  அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மற்றொருவர் உயிரிழந்த நிலையில்,  ஏனைய இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த இந்த வேன் ஜா-எலயில் இருந்து
முல்லைத்தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்தது என்று தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் வேன் சாரதி உட்பட நான்கு பேர் அடங்குவதாக பொலிஸார்
மேலும் தெரிவித்தனர்.

இறந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று
பொலிஸார் தெரிவித்தனர்.

வேனின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர். விபத்து குறித்து தலாவ பொலிஸார் மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments