இலங்கையில் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரிக்கப்பட்ட ஒருவர் பிரித்தானியாவில் தஞ்சம் கோரியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர், 2022ஆம் ஆண்டு இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டார்.
எனினும், சில மாதங்களுக்குப் பிறகுஇ அவர் தனது சொந்த நாட்டை விட்டு வெளியேறி பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார்.
அவர் பிரித்தானியாவுக்கு சென்ற இரண்டு வாரங்களுக்குப் பிறகுஇ இலங்கை அதிகாரிகள் அவரை கைது செய்ய பிடியாணையை பிறப்பித்துள்ளனர்.
இந்தநிலையில், தாம் நாடு திரும்பினால் துன்புறுத்தப்படுவார் என்ற அடிப்படையில்
தனக்கும் தனது மனைவிக்கும் அவர் அடைக்கலம் கோரியுள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவரது புகலிட கோரிக்கையை
பிரித்தானியா நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.
அத்துடன், அந்த முடிவுக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேன்முறையீடும் இந்த ஆண்டு மார்ச் மாதம் குடியேற்ற தீர்ப்பாய நீதிபதி ஒருவரால் நிராகரிக்கப்பட்டதாகக்
கூறப்படுகிறது.

