Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்இந்திய ஜோதிடரால் பரபரப்பு

இந்திய ஜோதிடரால் பரபரப்பு

உலகில் இன்னும் சில வாரங்களில் 3 ஆவது உலக போர் தொடங்க வாய்ப்புள்ளதாக
இந்தியாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்திருப்பது சமூக வலைத்தளங்களில் தகவலாகப் பரவிவருகின்றது.

அரியானாவை சேர்ந்த பிரபல ஜோதிடரான குசால் குமார் என்பவரே இது தொடர்பாக
தனது வலைதளப்பக்கத்தில் கூறியுள்ளார்.

தற்போது ரஷ்யா – நோட்டா உறுப்பு நாடுகளின் ஆதரவு பெற்ற உக்ரைன் இடையிலான போர் மற்றும் வட மேற்கில் இஸ்ரேல், பாலஸ்தீனம், ஈரான், சிரியா ஆகிய நாடுகளில் நிலவும் அமைதியின்மை போன்றவற்றால் மூன்றாம் உலகப்போர் குறித்த பேசப்படும் நிலையில் இவரின் கணிப்பு மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

அதன்படி 2024 ஆம் ஆண்டு உலகெங்கிலும் நடைபெறும் போர் பதற்ற சூழ்நிலைகளாளே இதை கணிக்க கூடியதாக உள்ளதாகவும் கொரியா நாடுகள், சீனா மற்றும் தைவான், மத்திய கிழக்கு போன்ற போர் பதற்றம் உள்ளிட்ட செய்திகளும், உக்ரைன்இ ரஷ்யா போர், இஸ்ரேல், காசா போரும் இதற்கு உதாரணமான கணிப்பை தருகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில நாடுகளில் ஆட்சி அதிகாரம் பெற்ற சிலர் பெரும் கவலைக்குரிய சூழ்நிலையை எதிர்கொள்வதாகவும் சிலர் கடுமையான உடல் நிலையால் பாதிக்கப்படலாம் அல்லது இராஜினாமா செய்ய நேரிடலாம் எனவும் இன்னும் சில நாடுகளின் அரசியல் எழுச்சி ஏற்படலாம் என்பதுடன்இ அதை தடுக்க இராணுவம் கொண்டு வரப்படலாம் எனவு; அவர் தனது கணப்பில் கூறியுள்ளார்.

இதனால் இன்னும் சில வாரங்களில் அதாவது ஜூன் 18 ஆம் திகதிக்கு பிறகு 3 ஆவது உலக போரை தூண்டுதலுக்கான சாத்திய கூறுகள் காணப்படுவதாகவும் அதற்கு முன்னதாக ஜூன் 10 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ கூட நிகழ வாய்ப்புள்ளதாக அரியானாவை சேர்ந்த பிரபல ஜோதிடரான குசால் குமார் என்பவர் தனது கணிப்பில் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments