Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeஏனையவைவிளையாட்டுஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் சாதனை

ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் சாதனை

ஜேர்மனியில் நடைபெற்ற அன்ஹால்ட் தடகள சம்பியன்ஷிப் போட்டியின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த வீரரான யுபுன் அபேகோன் புதிய மைல்கல்லினை எட்டியுள்ளார்.

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கையை சேர்ந்த வீரரான யுபுன் அபேகோன் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளார். இலங்கையை சேர்ந்த வீரரான யுபுன் அபேகோன், 100 மீற்றர் தூரத்தினை 10.16 வினாடிகளில் கடந்துள்ளார்.

10.16 வினாடிகள் என்பதுஇ யுபுன் அபேகோனின் தனிப்பட்ட சிறந்த பெறுதியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இறுதிப்பொட்டியில் இரண்டாம் இடத்தினை போலந்தின் டொமினிக் கோபெக் 10.21 வினாடிகளில் கடந்திருந்தார். அத்துடன் மூன்றாம் இடத்தினை ஓமானி ஓட்டப்பந்தய வீரர் அலி அன்வர் 10.25 வினாடிகளில் கடந்து
வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments