யாழ்ப்பாணம், பருத்தித்துறை – இன்பர்சிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத
ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில், கடந்த 06 ஆம் திகதி
நடுக்கடலில் தவறி விழுந்து மாயமான ‘ஆரோக்கிய கிங்’ என்ற மீனவரின் சடலமாக
இது இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கிப்பதாக தெரிவித்துள்ளனர்

