யாழ்ப்பாணத்தில் பெண்கள் நடத்தும் ‘அம்மாச்சி’ உணவகத்திற்கு இலங்கைக்கான
பிரித்தானியாவின் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக் விஜயம் ஒன்றை
மேற்கொண்டுள்ளார்
டித்வா சூறாவளிக்குப் பின் வட மாகாணத்திற்கு அவர் நேற்றுமுன்தினம் விஜயம்
மேற்கொண்டுள்ளார்.
இதன்போதே பெண்கள் நடத்தும் ‘அம்மாச்சி’ உணவகத்தில் பாரம்பரிய
யாழ்ப்பாண காலை உணவோடு அவர் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
இதன்போது தோசையும் சம்பலும் உண்ணும் புகைப்படங்கள் தற்போது
இணையத்தில் வைரலாகி வருகின்றன.

