சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாடு
அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள விஜய்
தலைமையிலான த.வெ.க. முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதற்காக கட்சியின்
கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருகிறது.
எந்தக்கட்சிக்கும் இல்லாத அளவுக்கு நிர்வாக ரீதியாக 128 மாவட்டங்களாக
பிரித்து மாவட்ட செயலாளர்களை த.வெ.க. அறிவித்துஇ செயல்படுத்தி வருகிறது.
அதேபோல், வார்டு பகுதி செயலாளர்களையும் நியமித்துள்ளது. தி.மு.க.
அ.தி.மு.க.விற்கு இணையான நிர்வாக கட்டமைப்பை த.வெ.க. உருவாகி வருகிறது.
இந்நிலையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026
சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வத் தேர்தல் சின்னமாக விசில்
சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. த.வெ.க. ஒரு
பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால், 234 தொகுதிகளிலும்
போட்டியிட ஏதுவாக ‘பொதுச் சின்னம்’ கேட்டு தேர்தல் ஆணையத்திடம்
விண்ணப்பித்திருந்தது.
கட்சித் தலைமை சார்பில் தேர்தல் ஆணையத்திடம் சுமார் 10 விருப்பச்
சின்னங்கள் வழங்கப்பட்டிருந்தது. அதில் விசில், ஆட்டோ, மட்டைப்பந்து ,
மடிக்கணினி, கப்பல், மைக்ரோஃபோன் போன்றவை முக்கியமாக
இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் தவெக தரப்பில் விசில் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இதில் விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு
செய்துள்ளது.

