Friday, September 11, 2026
https://thaaitv.com/
Homeஇந்தியாசாலமன் பாப்பையா காலமானார்

சாலமன் பாப்பையா காலமானார்

பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தமது 90 வது வயதில்
இன்று (11) காலமானார்.

வயது மூப்பு காரணமாக மதுரையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள்
செய்தி வௌியிட்டுள்ளன.

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும்இ தமிழ் இலக்கிய விளக்கவுரையாளருமான
சாலமன் பாப்பையாஇ எளிய மற்றும் நகைச்சுவையான தமிழில் பேசி மக்கள்
மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஆவார்.

அன்றாட சமூக நிகழ்வுகள் மற்றும் குடும்பச் சூழல்களை மையமாகக் கொண்டு
இவர் நடத்தும் பட்டிமன்றங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

சாலமன் பாப்பையா 1936ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி மதுரை மாவட்டம்
திருமங்கலம் தாலுக்காவில் உள்ள சாத்தங்குடியில் பிறந்தார்.

இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும்,  தியாகராசர்
கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.

மேலும்இ மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப்
பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மூலம்
திருக்குறள் மற்றும் சங்க இலக்கியப் பாடல்களுக்கு எளிய முறையில் விளக்கம்
அளித்து அவற்றின் சுவைகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

அத்துடன்,  இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான முதல்வன்,  போய்ஸ்
மற்றும் சிவாஜி உள்ளிட்ட மூன்று திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments