Friday, September 11, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் இடம்பெற்ற கொடூர கொலை

யாழில் இடம்பெற்ற கொடூர கொலை

பருத்தித்துறை – துன்னாலையில் நேற்று (09) இரவு கொடூர கொலை சம்பவம்
ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் மூன்று பிள்ளைகளின் தந்தையான
33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டதாக எமது
செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த ஒரு இரு தரப்பினரிடையே தொடர்ச்சியான பகை இருந்து வந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கொல்லப்பட்ட நபரை நேற்று இரவு
பின்தொடர்ந்த நால்வர் கொண்ட குழுவினர்,  ஓராங்கட்டை பகுதியில் வைத்து
அவர் மீது கொடூர தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டனர். இதன்போது
குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலையை மேற்கொண்ட நால்வரும் தலைமறைவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமானது தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments