Friday, September 11, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஅராலி கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தமைக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது

அராலி கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தமைக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது

அராலி கிழக்கு ஐயனார் ஆலயத்தின் காணியில் உள்ள கிணறு உட்பட அங்கு
இருந்த சில கிணறுகள் கடந்த சில தினங்களாக நீர்மட்டம் வழமைக்கு மாறாக
உயர்ந்து காணப்பட்டது.

இந்த விடயமானது தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினரின்
கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு வந்த தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் குடிநீர் வழங்கல்
குழாயினை சோதனை செய்தனர். இதன்போது அந்த குழாயில் இரண்டு
பாரிய துளைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் குறித்த துளைகள் சீர் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து கிணறுகளின் நீர்மட்டம் வழமைக்கு திரும்பியது.

கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தமைக்கான காரணம் குடிநீர் வழங்கல் குழாயின்
மூலம் ஏற்பட்ட நீர் வெளியேற்றமே என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு
சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments