டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பிரபல பாதாள
உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார எனப்படும் ‘கொண்ட ரஞ்சி’
மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொடையில் அமைந்துள்ள
மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அவர் இன்று (09) புதன்கிழமை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச
விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில்இ குற்றப்புலனாய்வுத் திணைக்கள
அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டார்.
அவரிடம் முதற்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவருடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘கொண்ட ரஞ்சி’ தொடர்பில் ஏற்கனவே பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பான
விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

