கிளிநொச்சி ஏ-9 வீதியின் விழாவோடை பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விழாவோடை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கார் ஒன்றும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தையடுத்து, கார் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற நிலையில்,
பின்னர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார்
முன்னெடுத்து வருகின்றனர்.

