யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்துஇ ஊழியர் மீது தாக்குதல்
நடத்திய குற்றச்சாட்டில் கைதானவரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் காயமடைந்த நபர் ஒருவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வைத்தியசாலை கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அவசர சிகிச்சை பிரிவின் அருகே காயமடைந்த நபரை இறக்கி விட்டுள்ளார்.
அதன் போது அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியருடன் மோட்டார் சைக்கிள் ஓட்டி முரண்பட்டு தாக்குதலையும் மேற்கொண்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் குறித்த நபரை மடக்கி பிடித்து , யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் குறித்த நபரை யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது , சந்தேகநபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு நீதி மன்று உத்தரவிட்டது.

