காசாவின் ரபாவில் இடம்பெயர்ந்த மக்கள் கூடாரங்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் அமெரிக்காவின் வெடிமருந்துகளை பயன்படுத்தியது என சிஎன்என் தெரிவித்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பதிவான வீடியோவை சிஎன்என் ஆய்வு செய்த வேளை இது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள சிஎன்என் வெடிகுண்டு நிபுணர்களின் ஆய்வின் மூலமும் இது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
காசாவின் தென்பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் கூடாரங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து பெரும் தீ மூண்டமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலின் இந்த தாக்குதல் காரணமாக 45க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 200க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

