Sunday, April 19, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார் ரஷ்ய தூதுவர்

ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார் ரஷ்ய தூதுவர்

இலங்கைக்கான ரஷ்யக் கூட்டமைப்பின் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் பொதுவான விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன்,  சுற்றுலா,  வர்த்தகம்,  தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரதான
துறைகளிலான ஒத்துழைப்பு தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ரஷ்யக் கூட்டமைப்பு தூதரகத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் ஜேர்மன் பெடோரோவ் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரொஷான் கமகே ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments