Thursday, April 16, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபயங்கரவாத தடைச் சட்டம் வேண்டாம்: யாழில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை

பயங்கரவாத தடைச் சட்டம் வேண்டாம்: யாழில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக இன்று பொது அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் பங்கேற்புடன் குறித்த நடவடிக்கை இடம்பெற்றது.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் மற்றும் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு தேவையில்லை என்பதை வலியுறுத்தி அந்த கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இதன்போது பெருமளவில் பொதுமக்களும் பல்கலைக்கழக மாணவர்களும்
கலந்துகொண்டு தபால் அட்டைகளில் தமது கருத்துக்களை பதிவு செய்து
வழங்கியிருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments